Wednesday, January 25, 2012

மாற்றம் செய்வோம் ! அதையே மாறுபட்டு செய்வோம் !!

பச்சை நிறக்  காடுகள் எங்கே !! அள்ளி பருக ஊற்று நீர் எங்கே !!
சுவாசிக்க நல்ல காற்றும் இல்லை !! சுகமான வாழ்க்கையும் இல்லை !!

நிம்மதி  இல்லை !! நல்ல ஆரோக்கியம்  இல்லை !!
தொட்டது எல்லாம் கெட்டது என்றால்  !! இது தான் அறிவியலின் வளர்ச்சியோ !!

அறிவியல் சாதனைகளைப்  பட்டியலிட்ட   மக்கள்,
அது கொன்று குவித்த பல உண்மைகளை நம்மிடையே மறைத்தது ஏன் ?!!!!
பிறப்பும் , இறப்பும்  கடவுளின் வரம் என்றான் அன்று !

கடவுளே இல்லை அதை நானே செய்வேன் என்றான் இன்று !!
உலக நாடுகள்  பெருமைகள் என்று எண்ணி  அழிவு கருவிகளை கணக்கிடிகிறார்கள்,
ஏன் அவர்களிடம் பட்டியல் இட இயற்கை வளம் இல்லையா  ??
இல்லை அதைக்  காக்க எண்ணம் தான்  இல்லையா??

நாட்டை காப்பற்ற எங்கள் கண்டுபிடிப்பு என்கின்றார்கள் இப்போது !!
 உலகைக்  காப்பாற்ற எப்போது விளித்து எழுவீர் !!!


இதை எழுதும் நான் அறிவியலுக்கு விரோதி இல்லை !!
வளர்ந்து வரும் தலைமுறையாக  !!
மாற்றம் செய்வோம் ! அதையே  மாறுபட்டு செய்வோம் !!

1 comment:

Sleepless Nights

  Under the moon's cold gaze, I lay tangled in the sheets of another sleepless night. The rhythmic ticking of the clock echoed through t...